திருப்பத்தூர்:மார்ச்:21, திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தும் நிலையில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் தர்மபுரி செல்லும் மேம்பாலம் அருகில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஜமால், லோகநாதன், உமாபதி, வெங்கடேசன், மேகநாதன், வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் ஆஞ்சி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மோர், இளநீர், பழ வகைகள், அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் சரவணன், பயாஸ் பாஷா, நகர செயலாளர் மதன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் குணபாலன் என பலரும் கலந்து கொண்டனர்.



