விவேகானந்தரின் 162 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாஜகவினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் உருவப்படத்திற்கு மாவட்ட துணை தலைவர் மோடிகண்ணன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து இனிப்பு மற்றும் 300 ற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், நகரத்தலைவர் ராஜகோபால், ஒன்றிய தலைவர்கள் ஈழவேந்தன், நடராஜ், பொறுப்பாளர்கள் ஶ்ரீதர், கோமல் வினோத், நாஞ்சில் பாலு, மகளிரணி சித்ரா, அய்யா சுரேஷ்
உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.