சென்னை, பிப்-08,
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் சென்னை எழிலகம் வளாகத்தில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் எஸ்.முத்தைய்யா , பொதுச் செயலாளர் ஆர்.முருகன் ஆகியோர் தலைமையில்
நடைபெற்ற இந்த உண்ணாவித போராட்டத்தில் மாநிலத் தலைமை நிலையச் செயலாளார் எம்.சேகர், மாநிலத் துணைச் செயலாளர்கள் என்.நாராயணன், எம்.சீனிவாசன், ஷாஜகான், மாநிலப் மாநிலப் பொருளாளர் எஸ்.திருப்பதி, துணைத்தலைவர் ஆர்.தண்டபாணி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில முழுவதிலுமிருந்து 3000க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலச் பொதுச்செயலாளர் முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- கிராம உதவியாளர்களுக்கு டி. பிரிவு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும்.
பணியில் இறக்கும் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கிராம உதவியாளர் பதவி வி.ஏ.ஓ மற்றும் ஓ.ஏ பணியாளர்கள் பதவி உயர்வுக்கு10 ஆண்டு பணிமூப்பு என்பதை 6 ஆண்டாக குறைத்து 20% ஒதுகீட்டை 50% என உயர்த்தி வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெறுகிறது என்றார்.