நியூ டெல்லி டிச 15
டெல்லி
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
தந்தை ஈ.வே.ரா. பேரனும் ஈ.வி.கே.சம்பத்தின் மகனுமான E.V.K.S. இளங்கோவன். தன் இளம் வயதிலேயே அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர். காங்கிரஸ் இயக்கத்தில் இளைஞர் அணி மாவட்டத் தலைவராக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக பதவி விகித்து 1984-ஆம் ஆண்டில் முதல்முறைாக சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர்.
அதனைத் தொடர்ந்து தனது கடின உழைப்பால் அயராத முயற்சியால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராவும் மத்திய இணை அமைச்சராகவும் படிப்படியாக உயர்ந்து தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுப்பட்டவர்.
மேலும்
இளங்கோவன் தந்தை ஈ.வி.கே.சம்பத் அவர்களும் எனது தந்தை ஜி.கே. மூப்பனாரும் நெருங்கி பழகியவர்கள், அந்த வகையில் அந்த குடும்ப தொடர்பு இன்று வரை தொடர்கிறது. இளங்கோவன் தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர், தொண்டர்களுக்கு சோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் அவர்களுக்கு ஊக்கம் அளித்து உற்சாகப்படுத்துபவர். அவரது இழப்பு தமிழ்நாடு காங்கிரசிற்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பாகும்
இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.