திண்டுக்கல் பொன்னி மாந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட மாங்குளம் பகுதியில் கொட்டப்பட்டு வரும் தோல் கழிவுகள் ,தோல் முடிகளால், சுகாதாரத்து சீர்கேடு ஏற்பட்டு மழை நீரோடு இந்த கழிவு நீரும் கலந்து மாங்குளம், சின்ன குளம், நடுக்குளம் , மூங்கில் குளம்,இவைகளில் கலந்து குடகனாற்றில் கலக்கிறது. இன்று இரண்டு டிராக்டர்களில் கொண்டு வந்த தோல் சவ்வு, கழிவுகளை, மக்களால் சிறைபிடித்து தடுத்து நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஊராட்சிதலைவர், கவுன்சிலர், வார்டுஉறுப்பினர்,பொன்னிமாந்துரைஊராட்சி பொதுமக்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, விஏஓ ,ஆர் ஐ, மற்றும் கன்னிவாடி முதன்மை மருத்துவ அதிகாரி சுகாதார ஆய்வாளர்கள் காவல் துறை அதிகாரிகள்,என அனைவரும் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் தோல் கழிவுகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த நேரடியாக பேசி நிரந்தரமாக அப்புறப்படுத்த தீர்வு காணப்பட வேண்டும். ஏற்கனவே 40 ஆண்டுகளாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் வாழ தகுதியற்ற பூமியாக உள்ளது .மேலும் திண்டுக்கல் சாக்கடை கழிவு நீரும், தோல் கழிவு நீரும், நேரடியாக மூங்கில் குளத்தில் விடப்படுவதால் பொன்னி மாந்துரை நடு ஊரின் வழியாக சென்று குடகனாற்றில் கலக்கிறது. இவைகளை தடுத்து தோல் கழிவு நீரூம், பாதாள சாக்கடை கழிவு நீரும், தனியாக செல்ல நீர்வழி பாதை அமைக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை .மேலும் ஊராட்சி பகுதிகளிலும் கழிவுகளை கொட்டாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை. இதை மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நிரந்தர தீர்வு எட்டபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்



