நீலகிரி. நவ.14
இ பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசு, வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இயற்கை பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இ. பாஸ் முறையை பின்பற்ற வேண்டும் என அறிவித்தது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்றவை மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு கோடைக்காலத்தில் 20 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் வருவதால் மாவட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது சோதனை சாவடிகளில் 5 கிலோமீட்டர் தூரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது சம்பந்தமாக ஆட்சியர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாவட்டத்தில் உள்ள எல்லை சோதனை சாவடிகளில் தானியங்கி செக்போஸ்ட் அமைக்கவும், பாஸ்டேக் முறையை அமல்படுத்தவும் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இ.பாஸ் மையம் மூலம் பயணிகள் தங்குமிடம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும் எனவும் க்யூ ஆர் கோடு முறையில் சோதனை சாவடி தடுப்புகள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்ட வாகன பதிவு டிஎன் 43 பதிவு பெற்ற வாகனங்கள் இ-பாஸ் பெற தேவையில்லை எனவும்
மேற்கண்ட நடைமுறைகளை நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



