நாகர்கோவில் நவ 15
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இந்த அரிய வாய்ப்பினை தகுதியுடைய நபர்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM- ARISE) மூலம் தொழில் தொடங்கிட
அதிகபட்சம் ரூ.10.00 இலட்சம் வரை கடனுதவி ரூ.3.50 இலட்சம் அல்லது 35% மானியத்தொகையுடனும், PM – AJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரை கடனுதவி ரூ.50,000/- அல்லது 50% மானியத்தொகையுடனும் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்த மகளிர்களுக்கு நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.
மேற்காணும் திட்டத்தில் பயன்பெற அதிகபட்சம் வயது வரம்பு 18-55 ஆகும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்கள் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com) என தாட்கோ மேலாண்மை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாட்கோ மூலமாக தொழிற்கல்வி பயில்வதற்காக NSFDC திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு உள்நாட்டில் கல்வி பயில ரூ.30.00 இலட்சமும் வெளிநாட்டில் கல்வி பயில ரூ.40.00 இலட்சமும். NSTFDC திட்டத்தின் மூலம் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு உள் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில ரூ.10.00 இலட்சமும் குறைந்த வட்டியில் கல்வி கடனாக பெற்று வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம் மாநகராட்சி, நகராட்சி.
பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு
உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு நலத்திட்ட உதவித் தொகையும்
வழங்கப்படுகிறது. மேலும் சொந்த வீடற்ற தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு 10%
பயனாளி பங்களிப்புடன் கூடிய வீடு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தில்,
வாரிய அட்டை பெற்று 5 ஆண்டுகளுக்கு பின் முறைப்படி அட்டையினை புதுப்பித்து
தற்போது அடையாள அட்டை நடைமுறையில் இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் அல்லது அவரது குடும்பத்தினரோ வேறு எந்த
கான்கிரீட் வீடுகளையும் சொந்தமாக வைத்திருக்க கூடாது. மேலும் அரசு மூலம் வேறு
எந்த வகையிலாவது வீடு ஒதுக்கீடு செய்து ஏற்கனவே பெற்றிருக்கக்கூடாது. அவர்களின்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம் மாநகராட்சி, நகராட்சி.
பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் குடும்ப
உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்கிட குறைந்த வட்டியில் பருவக் கடன்
வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட
ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.