மதுரை மே 23,
மதுரை பழமுதிர்ச்சோலையில் வைகாசி விசாகம்
மதுரை மாவட்டம் அழகர்மலையில் பிரசித்திபெற்ற ஆறாவது படைவீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம்தோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திரு விழாவானது 13 ஆம் தேதி 1 ம் திருவிழாவாக மங்கள இசையோடு தொடங்கியது. இந்த நிலையில் முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்களுடன் ஷண்முகார்ச்சனை ஷண்முகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் நடைபெற்றது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு, குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் விபூதி, சந்தனம், தேன், தீர்த்தம், இளநீர், பழம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான மஹா அபிஷேகமும் நடந்தது. பின்னர் பின்னர் மகா தீபாராதனைகள் நடைபெற்றது அப்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமியையும் பக்தர்கள் குவிந்து நெய் விளக்கேற்றி
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.