அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்.
போடி.
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் வனிதா வேணுகோபால் இவர் தன்னலம் பாராமல் தனது ஊராட்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை முன் உதாரணமாக செயல்படுத்தி உள்ளார். அதேபோல் அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை தெரு குழாய்அமைத்தல், கழிவு நீர் வடிகால், கழிவறை, பள்ளிகளுக்கு திட்ட பணிகள், என எந்த ஒரு மக்கள் பணியாக இருந்தாலும் களத்தில் முன்வந்து சீரும் சிறப்புமாக பணியை தொடங்கி முடிப்பதில் சிங்க பெண்ணாக இருந்து வந்துள்ளார்.
மேலும் பல்வேறு விமர்சனங்களை தாண்டி இந்த சிங்கப் பெண் அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் சார்பு நிறுவனங்களின் சார்பாக நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பாக சேவையாற்றி வரும் சேவையாளர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவிற்கு தேர்வாகியுள்ளார். தேர்வினை தொடர்ந்து சென்னையில் இவருக்கு சிறந்த சேவையாளர்களுக்கான கௌரவ டாக்டர் பட்டம்,மற்றும் நினைவு பரிசு வழங்கி அமெரிக்க பல்கலைக்கழகம் சார்பு நிறுவனங்கள் பாராட்டியுள்ளது. இந்த பாராட்டினை தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பெற்றிருப்பது தேனிக்கு பெருமை என்று சமூக வலைதளங்களிலும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.