தஞ்சாவூர் ஆகஸ்ட் 11
தஞ்சாவூர் தலைமை தபால் நிலை யம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கண்ணன் தலைமை தாங்கி னார் .ஆர்ப்பாட்டத்தைதாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாய த்திற்கு போதுமான நிதி ஒதுக்க வில்லை ,விவசாயிகள் புறக்கணி க்கப்பட்டுள்ளனர். உர மானியம், உணவு மானியத்திற்கு நிதி குறை க்கப்பட்டுள்ளது. வறுமையில் வாடும் கிராமப்புற ஏழைகளுக்கு உதவும் 100 நாள் வேலை திட்டத்திற் கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யிக்கப்படவில்லை,விவசாயகடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களை விவசாயத்தில் இருந்து வெளியேற் ற வேண்டும். விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வே று கோரிக்கை வலியுறுத்தப்பட்டன
ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய விவசா யிகள் முன்னணி மாநில செயற்குழுழுஉறுப்பினர் காளியப் பன் நிறைவு செய்து பேசினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சபை நிர்வாகிகள் பாஸ்கர், பன்னீர் செல்வம் ,செந்தில்குமார், மாவட்ட விவசாய சங்க தலைவ விஜயகுமா ர், கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் | நினைவடைந்த விவசாய சங்க செயலாளர் இப்ராஹிம் ,ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகி கள் , அருணாசலம்,ராவணன் தமிழ்ச்செல்வி , ,துரை மதிவாணன் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்