காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி உத்தரவினை வழங்கினர். இதில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நீலகண்டன் தனது ஊராட்சி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் கனவு இல்லமாகவே காணப்பட்ட குடிசை வீடுகளை கணக்கீடு செய்து அவற்றில் 38 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி உத்தரவுகளை பெற்று தந்தார். மேலும் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி உத்தரவினை பெற்ற பொதுமக்கள் தங்களுக்கு பணி நியமன உத்தரவு கிடைக்க உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு வையாவூர் ஊராட்சியில் பொதுமக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்தனர். இதில் வையாவூர் ஊராட்சி ஒன்றிய செயலர் ஜெகஜீவன்ராம் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்



