தஞ்சாவூர் மே 24
தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள்.
தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு ,பூதலூர் கும்பகோணம் ,பாபநாசம், திருடமருதூர் ,ஒரத்தநாடு பட்டுக்கோட்டையை மற்றும் பேராவூரணி ஆகிய தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அத்தியாவசிய பண்டங்களை லாப நோக்கத்தில் கடத்தி விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்படி 27 இருசக்கர வாகனங் கள் 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 34 வாகனங்கள் கைப்பற்றப் பட்டு வழக்கு பதிவு செய்து நிலு வையில் இருந்து வருகிறது அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமை கோரி உரிய ஆவணங்களுடன் எவரும் முன் வராத காரணத்தினால் அரசுக்கு ஆதாயம் செய்து மின்னணு வாயிலாக ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
எனவே இந்த வாகனங்கள் தங்களுடையது என கருதினால் சம்பந்தப்பட்டவர்கள் வாகனம் உரிமை தொடர்பாக அனைத்து அசல் ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வாகனத்தினை உரிமை கோரி விண்ணப்பிக்கலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.