தென்தாமரைகுளம் மே 14
பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (42) இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.இவரிடம் மொத்தம் 40 ஆடுகள் உள்ளன.
இந்த ஆடுகள் நேற்று தென்தாமரைகுளம் அடுத்துள்ள மேலசந்தையடி அருகே விவசாய நிலத்தில் அறுவடை செய்து முடிக்கப்பட்ட நெற்கதிர்களின் கதிர்களை மேய்ச்சல் செய்து கொண்டிருந்தது.
அப்போது தீடீரென அருகில் எலும்புக்கூடு போல் காட்சியளித்து கொண்டிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தது.
மேய்ச்சலில் நின்று கொண்டிருந்த இரண்டு ஆடுகள் மீது மின்கம்பி விழுந்ததால் ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தது.
சம்பவம் குறித்து கவுன்சிலர் செல்வராஜ் மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு,மின் ஊழியர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் நாராயணனிடம் கேட்டபோது;
ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது நான் சற்று தூரமாக நின்று கொண்டிருந்தேன்.திடீரென பார்க்கும் போது இரண்டு ஆடுகள் துடி துடித்து கொண்டிருந்தது.ஆடுகளை தூக்குவதற்காக ஓடி வந்தபோது ஆட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது.
அதிர்ஷ்டவசமாக நானும் மீதமுள்ள ஆடுகளும் உயிர் தப்பின.இப்பகுதியில் பல மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.அடுத்த கம்பி அத்து கீழ விழும் முன் மொத்த மின்கம்பிகளையும் மாற்றினால் நல்லது. விவசாயிகள் கோரிக்கை.