நாகர்கோவில் மே 19
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாறுதட்டு பகுதியில் செயல்பட்டு வருகின்ற வாறுறதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை யின் ஆண்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் வைத்து அன்னை தெரசா அறக்கட் டளையின் தலைவர் என்.எம்.பிரேம்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விருதுகளை வழங்கினர்.
கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.மாநில, தேசிய அளவிலும் பாட்மிண்டன் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த நாராயணன் நாயருக்கு சாதனைகளின் சிகரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதிலுமிருந்தும் சமூக சேவகர்கள், குருதிக் கொடையார்கள், ஊடகத் துறையினர், கலைஞர்கள், ஆசிரியர்கள் என சுமார் நூறுக்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் மற்றும் விருது சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் நாகர்கோவில்
மாமன்ற உறுப்பினர் கெளஷி, தமிழ் நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் நெய்னா முகமது, உதவும் சிறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் சிவபாலன், பசித்தோர்க்கு உணவு அறக்கட்டளையின் நிறுவனர் கருங்கல் ஜார்ஜ், பணி நிறைவு தலைமையாசிரியர் முனைவர் ஜஸ்டஸ் அமிர்தையன், கோ கோ விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற உடற்கல்வி ஆசிரியர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் களரிக் கலைஞர்களின் குறுந்தடி விளையாட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவியர் பெரியோர்கள் கலந்துகொண்டனர்.