கரிவலம் வந்த நல்லூரில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி சங்கரன் கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூர் தேவேந்திர குல வர்த்தக சங்கத்தின் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்வில் தேவேந்திர குல வேளாளர் வர்த்தகர் சங்க தலைவர் தங்கராஜ் பாண்டியன் செயலாளர் செல்வின் பொருளாளர் மகேஷ் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒன்றிணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள் நிகழ்ச்சியில் சதீஷ்குமார் முத்துக்கனி முனியாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



