தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய சிலம்பு போட்டிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது .சன்யுக்தா பாரதிய கேல் பவுண்டேஷன் தமிழ்நாடு சார்பாக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது.இதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பாரம்பரிய சிலம்ப மாணவ, மாணவியர்கள் சிலம்ப போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். சிலம்ப பயிற்சியாளர் முருகன்,பாவேல்ராஜ் மற்றும் யோக ஜெயப்பிரியா அவர்கள் மாணவர்களை வழிநடத்தி சென்றனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.



