குலசேகரம், மார்- 7
குமரியில் திற்பரப்பு அருவி உள்ளது. இந்த இந்த அருவியல் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவி பராமரிப்பு பணிகளை திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த அருவி பூங்காவை விஜின் குமார் என்பவர் தற்காலிக ஊழியராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இந்த பூங்காவை தினமும் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் வெளியேறிய பிறகு நுழைவு வாயிலை பூட்டி செல்வது வழக்கம். நேற்று மாலையில் ஊராட்சி பணியாளர் விஜின்குமார் ஆறு மணிக்கு மேல் பூட்டி உள்ளார். அப்போது அங்கு வந்த அருமனை பகுதி சேர்ந்த நபர் ஒருவர் திடீரென விஜின் குமார் இடம் கெட்டவர்கள் பேசியதோடு அவரை தாக்கியுள்ளார்.
இது குறித்து விஜின் குமார் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் அருண் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை திற்பரப்பு பேரூராட்சி ஊழியர்கள் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். பணியாளரை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதற்கு ஆதரவு தெரிவித்து பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணைத்தலைவர் ஸ்டாலின் அங்கு வந்தனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஊழியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.