ஊட்டி. ஜன. 20.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் ஊட்டிக்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரத்த வண்ணமாய் இருந்து வருகிறது. உதகை படகு இல்லத்தில்
நீண்ட வரிசையில் காத்திருந்து படகுகளில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்து வரும் சுற்றுலா பயணிகள் இதமான கால நிலையில் ஏரியில் படகு பயணம் செய்து மகிழ்ந்தனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆறு நாட்கள் தொடர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டு முடிந்த நிலையிலும் சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் தொடர்கிறது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் மிக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த நிலையில் உள்ளூர் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
குறிப்பாக உதகை படகு இல்ல ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு பிடித்த மோட்டார் படகு, துடுப்பு படகு, மிதிபடகு ஆகிய படகுகளில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.