தஞ்சாவூர். அக் 27
தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் சுற்றுலா தகவல் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் முன்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் ரூபாய் 5 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் உதவி மையம் மற்றும் சுற்றுலா தகவல் மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில் . சுற்றுலா தகவல் மையத்தின் மூலம் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப் பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் பெரிய கோயில், சரஸ்வதி மஹால் நூலகம் ,அரண்மனை கும்பகோணம், தாராசுரம் சோழர்களின் வரலாறு பின்னணி கொண்ட இடங்கள் போன்ற பல்வேறு சுற்றுலா தளங்கள் வரலாற்றின் வாயிலாக சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக் கும் சுற்றி காண்பிக்கின்றனர்
இந்த மையத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை பற்றிய படங்கள் வழித்தடங்கள் பல்வேறு சுற்றுலா தளங்களின் விவரங்கள் காட்சிப் படுத்தப்பட்டு ள்ளன. சுற்றுலா பயணிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன்,துணை போலீஸ் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா,போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெத்தினம் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் பெரிய கோயில் செயல் அலுவலர் மாதவன், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.