கங்கணங்கிணறு கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு மாவட்ட கவுன்சில் துவக்கி வைத்தார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன் உள்பட்ட கங்கணகிணறு கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார், பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தலைமையில், கங்கணங்கிணறு , திமுக சசிகுமார், ஆனந்தன், பாக்கியராஜ், குமார், ஆகியோர் முன்னிலை நடைபெற்றது இதில் ஓலைகுளம் திமுக இளைஞர் அணி மணிகண்டன், ராஜாபுது குடி பால்ராஜ், ஊர் நாட்டாமை, பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கங்கணகிணறு திமுக கிளைச் செயலாளர் சண்முகவேல் செய்திருந்தார்



