ராமநாதபுரத்தில்
டைட்டானிக் கப்பல் பொழுதுபோக்குடன் கூடிய பொருட்காட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம் கேணிக்கரை மகர் நோன்பு திடல் அருகே நல்லம்மாள் மைதானத்தில் தமிழகத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ சாய்ராம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், டைட்டானிக் மியூசியத்துடன் கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சியை
ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் ஆர்.கே.கார்மேகம் துவக்கி வைத்தார்.
இந்த பொருட்காட்சி
1 மாதம் வரை நடக்கிறது. துவக்க விழா நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்ராம் என்டர்டெயின்மென்ட் நிறுவன உரிமையாளர் எம்.கே.உதயகுமார். வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் காளிதாஸ், செல்வராணி, சிட்டி
ஈவென்ட் உரிமையாளர் சரவணன், என் எஸ் ஏ பில்டிங் மெட்டீரியல்ஸ் உரிமையாளர் நவீத்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கட லில் செல்லும் டைட்டானிக் கப்பலை 100 மீட்டர் நீளத்திற்கு தத்துரூபமாக தரையில் வடிவமைத் துள்ளனர். காண்போர் வியக்கும் வண்ணம், திரையில் கண்ட ஹாலிவுட் திரைப்படமான டைட்டானிக் நிஜ கப்பலைப் போல் தோற்றம் அளிக்கிறது. டைட்டானிக் கப்பலுக்குள் எப்படி இருக்கும் என்பதை அதன் அசல் தோற்றத்தில், பிரமாண்ட ஓட்டல், தர்பார் மண்டபம், கேப்டன் கேபின், ஜேக், ரோஸ் தனிமையில் சந்தித்த அறை, ரோஸை ஜேக் ஓவியமாக வரையும் காட்சி, கப்பலின் மேல்தளம் என பலவிஷயங்களை கண்முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தி யுள்ளனர். பொருட்காட்சி காண வந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
குழந்தைகள் முதல் பெரியோர் மகிழும் விதமாக, ராட்சத ராட்டினங்கள், குழந்தைகள் சறுக்கு விளையாட்டு, பேய் வீடு உள்பட, எண்ணற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் ஸ்டால்கள், உண்டு மகிழ உணவு கூடங்கள் உள்ளன.
தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இப்பொருட்காட்சி 1 மாதம் நடைபெறுகிறது.