திருவண்ணாமலை டிச.13-
பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அறப்போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினரும், பாமக மாநில துணை தலைவருமான மு. துரை தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க செயலாளர் ஆர்.விஷ்வா, மாவட்ட செயலாளர்கள் வீ.கலைமணி, தி.கா.சீனுவாசன், இரா.குட்டி ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் இரா.ஜானகிராமன் அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திடவும் வன்னியர்களுக்கு 10.5 சதவித உள்இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறை படுத்திடவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கார்த்திகேயன், பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் கே.ஜெய்சங்கர், மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.எஸ்.சிலம்பு யாதவ், ஊடக பேரவை மாநில துணை செயலாளர் சுரேஷ் காங்கேயன், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் டி.விஜய்குமார், மாவட்ட தலைவர் வெ.ராஜூவ்காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ச.பாண்டுரங்கன், மாநகர தலைவர் குட்டி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



