[8:21 pm, 17/10/2024] +91 90807 28304: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கநாதிருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்று வரும் அருள்மிகு ஶ்ரீ சக்தி வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்
இதற்கான செலவின பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தும் வகையில் முழு ஒத்துழைப்பையும் வேண்டுவோர் ஏற்றுக் கொண்டு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் பௌர்ணமி விளக்கு பூஜை நடைபெற கிராம பொண்ணடி வாரிசுகள் சார்பில் நடைபெற்றது.
இது போன்று தொடர்ந்து நடைபெறும்
இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் திருமண தடை நீங்குதல் குழந்தை பாக்கியம் உண்டாகுதல் குடும்ப ஒற்றுமை கிடைத்தல் வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வேண்டும் வரம் தரும் சக்திவாய்ந்த அம்மனாக இந்த ஊரில் அருள் பாலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் கிராம பெண்கள்
அதிகளவில் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும் பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம பொதுமக்களின் ஒற்றுமை வேண்டி விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
[8:21 pm, 17/10/2024] +91 90807 28304: