திருப்பூர், டிசம்பர் 31 –
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
குற்றங்கள் 2024ஐ விட கொஞ்சம் கூடி உள்ளது. பேருந்து நிலையம் ரயில் நிலையம் சந்தேகப்படும் இடங்களில் ரோந்து பணி தீவிர படுத்தி பலரை பிடித்துள்ளோம். ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை. பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது.
விபத்துக்கள் பொருத்தவரை 178 ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் 167 பேரை பிடித்துள்ளோம். போதைப்பொருள் 600 கிலோ 230 கிலோ கஞ்சா சாக்லேட், உயர்ரக போதைப்பொருட்கள் சிறிதளவு 21 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4300 கிலோ புகையிலை பறிமுதல் செய்து 700 வழக்கு 900 பேர் கைது. 12 கொலை வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
10 போக்ஸோ வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் 1600 வழக்குகள் 1100 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. 19 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு 7 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதில் மட்டும் மூலம் 17 ஆயிரம் வழக்குகளில் 3 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
காவலர் மீது கத்தி குத்த முயற்சி சம்பவத்தில் பொதுமக்களை ஆபாசமாக பேசியதாக அவரை தடுக்க முயன்ற காவலரை கத்தி மூலம் தாக்க முயன்றுள்ளார். அவர் மது போதையில் இல்லை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 2020 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. சைதாப்பேட்டையை சேர்ந்த இளங்கோ எனவும் தெரியவந்துள்ளது. பழைய வழக்கை வைத்தே இந்த தகவலை பெற்றோம். காவலர்கள் இது போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனை எதிர்கொள்ள தான் எங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
நியு இயர் கொண்டாட்டம் சாலையில் கிடையாது. அனுமதியும் இல்லை. பொதுஇடங்களில் முகம் சுழிக்கும் வகையில் அனுமதி கிடையாது. தனியார் இடங்களில் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம் என மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் மாநகர இணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.



