சென்னை, மே31
திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது சிறுமி – லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ்.
மலையேற்றத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து பல்வேறு மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில், இமய மலையில் மலையேற்றம் மேற்கொண்ட லலித் ரேணு, 5,364 மீட்டர் உயரம் ஏறி Everest base camp-ஐ அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இச்சிறுவயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ள சிறுமி லலித் ரேணுவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பாராட்டினர்.