By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
தமிழ்நாடுதூத்துக்குடி

ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை

Last updated: November 12, 2025 6:57 pm
November 12, 2025
35 Views
Share
SHARE

தூத்துக்குடி, நவ.12 –

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது துறைமுக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இறக்கைகள் கையாளப்பட்டது இதுவே முதல் முறை.

இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், 11.11.2025 அன்று ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, கடந்த 22.08.2025 அன்று ஏற்றுமதி செய்யப்பட்ட 101 இறக்கைகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்கு கையாளுதலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டு 2025-26 இல், 2025 அக்டோபர் வரை மொத்தம் 2300 காற்றாலை இறக்கைகளை இத்துறைமுகம் கையாண்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டு 2024-25 அக்டோபர் மாதத்தில் கையாளப்பட்ட 1425 இறக்கைகளைக் காட்டிலும் 61% அதிகமாகும்.
சீனாவின் கின்சோவ் துறைமுத்தில் இருந்து எம்.வி. ஜி.எச்.டி. மரினாஸ் கப்பல் மூலம் இந்த இறக்கைகள் கொண்டுவரப்பட்டன. கூடுதல் தளம் -II இல் இரண்டு துறைமுக மொபைல் கிரேன்கள் மூலம் பாதுகாப்பாகவும் திறமையாகவும் இந்த சரக்கு கையாளப்பட்டது. கப்பல் முகமை, சரக்கு கையாளுதல், சுங்க முகவர் மற்றும் தரைவழி போக்குவரத்து பணிகளை என்.டி.சி லாஜிஸ்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையாண்டது.

89.5 மீட்டர் மற்றும் 76.8 மீட்டர் நீளமுள்ள இந்த இறக்கைகளுக்கு சிறப்பு கையாளுதல் மற்றும் பிரத்யேக சேமிப்பு ஏற்பாடுகள் தேவை. இத்துறைமுகம் சுங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் 1,00,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரத்யேக சேமிப்பு வசதி மற்றும் அத்தகைய பெரிய அளவிலான சரக்குகளை சேமிக்க சுங்க பத்திரத்திற்கு வெளியேயும் விசாலமான பகுதியைக் கொண்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை இணைப்பு மற்றும் திறமையான பணியாளர்களின் கிடைப்ப்பு ஆகியவையும் இந்த வரலாற்று சாதனையின் முக்கிய காரணிகளாகும்.

வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தா புரோஹித், தனது செய்திகுறிப்பில், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டது, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் துறைமுகத்தின் செயல்திறன், திறன் மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும், வ.உ.சி. துறைமுகம் வழியாக சரக்குகளை கையாள்வதில் சிறந்த சேவையை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மேற்கு தொகுதியில் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு
திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பாங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 117 வது கிளை திறப்பு விழா

July 26, 2024
76 Views
செயற்கை கால் வழங்கிய தேனீக்கள் அறக்கட்டளை
கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீடுரில் நீர்மோர் பந்தல்
குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account