ஊட்டி. ஜன. 29.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தாலுக்கா
மற்றும் பந்தலூர் தாலுக்கா அரசுப ள்ளிகளில் கழிப்பறை கட்ட வழங்கப்பட்ட ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் நிதியில் பன்னிரண்டு பள்ளிகளு க்கு
காசோலையாக பள்ளித்தலைமை ஆசிரியர்களிடம் நேரடியாக குன்னூர் ரெப்கோஹோம் கிளை மேலாளர் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிதியை தற்போதைய கூடலூர் ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகள் மற்றும் பந்தலூர் பேரவை பிரதிநிதி ஒருவர் கூட்டாக இணைந்து தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை எடுத்துத் தரச் சொல்லி பணத்தை முறைகேடாக பெற்றதுடன் கழிப்பறை யை தாங்களே கட்டித் தருவதாக கூறி பேருக்கு தரமற்ற தகரகூரையிலான கழிப்பறை களை கட்டியுள்ளனர் இதில் பெரும் தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து
கூடலூர் காந்தி சிலை முன் பு ரெப்கோவங்கி ஊழல் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான தாயகம் திரும்பிய மக்கள் மற்றும் வங்கி அ. வகுப்பு உறுப்பினர்கள். பங்கேற்றனர். வங்கி பேரவை ஒரு சில பேரவை பிரதிநிதிகள் மோசடியில் ஈடுபட்டதை கண்டித்து இதுபற்றிய முழு ஆதாரங்களை திரட்டி முன்னாள் பேரவை பிரதி நிதிகள் மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.



