திருவள்ளூர் ஏப்ரல் 18
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அனந்தேரி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விக்கி என்பவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்தார் அந்த மனுவில்
ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் அது போல் வடதில்லை என்ற கிராமத்தில் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் அரசு நிதியில் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச வீடுகளை முன்பணம் போட்டு கட்ட முடியாத நிலையில் உள்ளதால் அதனை முன்பணம் செலுத்தி கட்டுவதற்கு உதவி செய்து வருகிறேன்.
இந்த நிலையில் வடதில்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் நாகராஜ் ஆகியோர் மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்றால் எங்களுக்கு கட்டிங் கொடுத்தால் மட்டுமே முடியும் எனவும் கட்டிங் தராமல் இங்கு வீடு கட்ட முடியாது என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் மேலும் எங்கள் கிராமத்தில் உங்களைப் போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மாட்டோம் ஒப்பந்தத்தை நாங்களே எடுத்து வீடு கட்டித் தருகிறோம் என சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள விக்கி,
விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கட்டப்படும் வீட்டுக்கு கட்டிங் கொடுக்க முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த நபர்கள் எப்படியாவது வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்திட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் வீடு கட்டும் பணியை தொடர்ந்து செய்து வந்தேன் இதனால் ஜாதிப் பெயரை சொல்லி திட்டியும் மிரட்டியும் என்னை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற அந்த நபர்கள் அவர்கள் திட்டுவதை வீடியோ எடுக்காமல் அதை எடிட் செய்து விட்டு நான் பேசுவதை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு எனது பெயருக்கு அவபெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே
எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து இருளர் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.