சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தின் வழியாக வைகை ஆறு ஓடுகின்றது இங்கு ஸ்ரீ புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் ஆலயம் வைகை ஆற்றங் கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது.
இங்கு தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் காசியில் தர்ப்பணம் செய்யும் போது எந்த அளவு புண்ணியம் இருக்கின்றதோ அது வீசம் அளவு அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்று திருப்புவனம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த வண்ணம்
வைகை கரையில் தர்ப்பணம் செய்வதற்காக வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி மஹாலயா அமாவாசை போன்ற நாட்களில் கொடுத்தால் இன்னும் சிறப்பு என்று மக்கள் அலைமோதுகின்றனர் மற்ற அம்மாவாசை நாட்களை விட இந்த மஹாளய அம்மாவாசை மிகவும் சிறப்பானது என்பதற்காக மக்கள் இங்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இங்கு வருகை புரிந்தவர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் பாதுகாப்பு பணியிலும் திருப்புவனம் காவல்துறையினர் சிறப்பான முறையில் ஈடுபட்டிருந்தனர்.