பரமக்குடி.அக்.14: முதுகுளத்தூர் அருகே உள்ள பூவாய் குளம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் இந்த கோவிலிற்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தரும் நிலையில் பெருமாளிற்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று நடைபெற்ற சிறப்புகளை பொழுது,ஶ்ரீனிவாச பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகம் மற்றும் சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கொண்டக்கடலை சுண்டல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை படையல் செய்து சிவபுரா வழிபாடுகளின் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



