விளாத்திகுளம், ஜனவரி 01 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாய்ஸ் கிளப், வாக்கிங் ஃபிரண்ட்ஸ் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரே ஊர் அணி வீரர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் முதலாம் ஆண்டு கபடி போட்டி விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விதமாக வெள்ளி நாணயங்களை தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், விளாத்திகுளம் பேரூராட்சி கவுன்சிலருமான மகேந்திரன் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.
உடன் அரசு ஒப்பந்தக்காரர் முருகன், வார்டு செயலாளர் லெனின், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கபடி போட்டியை வாக்கிங் ஃபிரண்ட்ஸ் குழுவினர் தொடங்கி வைத்தனர். பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியை ஏராளமான கபடி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.



