ஜன:31
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,362 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கினங்க, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,362 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 29.01.2025 முதல் 13.06.2025 2 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 10,300 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் 250 கனஅடி/வினாடி அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கனஅடி/வினாடி அளவிற்கு படிப்படியாக அதிகரித்து வழங்கப்படும். இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய வட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தமாக 94,362 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்தும் இத்துறைக்கு நீர்பங்கீட்டுப்பணிகளில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒத்துழைப்பு நல்க வேண்டியும் விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்தும் இத்துறைக்கு நீர்பங்கீட்டுப்பணிகளில்
ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் குமார், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் எ.மகேந்திரன், செயற்பொறியாளர் ஆதிசிவன், உதவி உதவிப்பொறியாளர் கே.மாரிமுத்து, தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



