தேனி, நவம்பர் 13 –
தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்ததான ஒருங்கிணைப்பாளர் மு.அஜித் பாண்டி அவர்களுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர். முத்து சித்ரா அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் இணை இயக்குனர் மருத்துவ நலப்பணிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், ரத்ததான கொடையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மு. அஜித் பாண்டி கூறியதாவது: தொடர்ந்து ரத்ததான முகாம்கள் மற்றும் தினந்தோறும் அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை, பிரசவ சிகிச்சைக்காக ரத்ததானம் கொடையாளர்களை அனுப்பி வைத்து வருகிறேன். பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு இரத்ததானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் தானம் செய்ய ரத்தம் 24 மணி நேரத்திற்குள்ளாக நம் உடலால் மீண்டும் ஈடு செய்யப்படுகிறது. அனைவரும் ரத்ததானம் செய்து இரத்ததானம் பற்றாக்குறை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.



