தேனி, நவம்பர் 25 –
மலை மாடுகளை வனப்பகுதிக்கு உணவிற்காக மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லும் அப்பாவிகளை மற்றும் கிராம மக்களை வனத்துறையினர் துன்புறுத்தினால் அவர்கள் குடும்பமே பாதிக்கும் அளவிற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தோழமைக் கட்சியான அதிமுகவுடன் சேர்ந்து மலை மாடுகளை மேய்க்க இடையூறு செய்யும் வனத்துறையினர் வேலையே போகும் அளவிற்கு அவர்கள் மீது மனித உரிமை கமிஷன் வழக்கு தொடரப்படும் என்று காட்டமாக பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபிஎஸ் பேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது பற்றி கேட்ட பொழுது அரசியலில் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்களது பாரம்பரிய தொழிலான நாட்டு மாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது நாட்டு மாடுகளின் உணவுக்காக மலைப்பகுதிகளில் மாடு மேய்த்து வந்தனர். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வனத்துறையினர் கடுமையாக சட்டங்கள் போட்டு மாடு படப் பகுதியில் வாடு மேய்ப்பதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சீமான் போடி குரங்கணி மலைப்பகுதியில் கரட்டுப்பட்டி கிராம மக்களுடன் சேர்ந்து வனத்துறையில் எதிர்ப்பையும் மீறி மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தற்போது தேனி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வந்த பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கரட்டுப்பட்டியில் உள்ள கிராம மக்களை சந்தித்து மரத்தடியில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். கரட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த கிராம மக்கள் அவருக்கு தங்கள் கிராம பாரம்பரிய முறைப்படி தேவராட்டம் ஆடி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு செய்த நயினார் நாகேந்திரன் மரத்தடி திண்ணைப் பிரச்சாரத்தில் பங்கேற்றார். கிராம மக்களை ஒன்று திரட்டி மலை மாடுகள் மேய்ப்பதில் உள்ள பிரச்சனைகளை கேட்டு அறிந்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர்களுடன் பேசத் தொடங்கிய நைனார் நாகேந்திரன் நானும் எனது வீட்டில் மாடு வளர்ப்பவன் தான் என்று பேச்சு தொடங்கி வனத்துறையில் மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறை மீது தனது கண்டனத்தை கடுமையாக வெளிப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சியில் வார்டுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும் அவைகளின் வாழ்வாதாரத்திற்காக பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும் என்றும் கூறினார்.
மேலும் வனத்துறையில் நாளைக்கே நீங்கள் மாடு மேய்க்க செல்லுங்கள் உங்களை யார் தடுப்பார் பார்க்கலாம். அப்படி தடுக்கும் வனத்துறையினர் யார் என்றாலும் அவர்கள் பெயரை உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அவர்கள் குடும்பமே பாதிக்கும் அளவிற்கு நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் தனது வேலையையே இழக்க வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு விலங்குகள் மேய்ச்சல் தினம் என்று ஒரு தினம் உருவாக்கப்படுவதாகவும் அதற்கு நமது பாரதப் பிரதமர் குழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மாடுகள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு பாரதிய ஜனதா துணை நிற்கும் என்றும் கூறினார்.
மேலும் இன்னும் ஓரிரு மாதங்கள் தான் திமுக ஆட்சி. அதற்கு பின்னர் நமது தோழமைக் கட்சியான அதிமுக ஆட்சிக்கு வந்து விடும். அதற்குப் பின்பு நீங்கள் நிம்மதியாக வனப் பகுதியில் மாடு மேய்க்கலாம் என்று கூறினார்.
உங்களுக்கு இடையூறு செய்தால் உடனடியாக அதிமுக அல்லது பாரதிய ஜனதா கட்சியினருக்கு தகவல் தெரிவியுங்கள். உடனடியாக நாங்கள் வந்து உங்களுக்கு வனப்பகுதியில் மாடு மேய்க்கும் அவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் செய்வோம் என்றும் வனப்பகுதியில் மாடு மேய்ப்பவர்களை துன்பப்படுத்துபவர்கள் குடும்பமே கஷ்டப்படும் அளவிற்கு அவர்கள் துன்பப்படுவார்கள் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களை மனுக்களை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிகள் இணைய வாய்ப்புள்ளது என்று கூறியது பற்றி கேட்ட பொழுது அரசியல் களத்தில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பழைய மாடு மேய்க்க சென்ற பொழுது சுமார் 58 நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தது நீக்க முயற்சி எடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு தமிழக அரசு தொடுத்த வழக்கை அவர்கள் தான் நீக்க வேண்டும் என்றும் வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மேலோட்டமாக கூறிச் சென்றார்.



