இரணியல், நவ- 20
இரணியல் அரு|கே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்காக தக்கலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளார். ஆனால் லோன் கட்டி முடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதற்கிடையே வங்கியில் இருந்து வந்த ஊழியர்கள் பணம் கட்ட கூறி மணிகண்டனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தமடைந்த மணிகண்டன் நேற்று மாலை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளி கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மணிகண்டன் உயிரிழந்தார்.
மணிகண்டனை வங்கி ஊழியர்கள் மிரட்டியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சட்டி உள்ளனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


