நாகர்கோவில், மே 30:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சுப்பாறை அணை நீர்மட்டம் 41 அடியை எட்டுகிறது.
குமரி மாவட்டத்தில் கலந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் அவ்வப்போது சாரல் மழை பெய்வதுமாக இருந்தது.
மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சுப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக பேச்சுப் பாறை அணை நீர்மட்டம் 40.77 அடியாக உயர்ந்துள்ளது. பேச்சுப்பாறை அணையில் 42 அடியை நீர்மட்டம். எட்டினால் அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் நிலை உள்ளது. இதனால் 24 மணி நேரமும் நீர்வளத்துறையால் அணை நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதைப் போன்று பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் 49.85 அடியாக உள்ளது. அணைக்கு 1088 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 22 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1 ல் 6.89 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 66 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றாறு- 2ல் 6.98 அடி நீர்மட்டம் உள்ளது. 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொய்கையில் 14.8 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 29.2 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு 10 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 14.1 அடி ஆகும்.
இன்று காலை வரை அதிகபட்சமாக பேச்சுப்பாரை 15.4 மி.மீ மழை பெய்திருந்தது. கன்னிமார் 4.2, முக்கடல் 5.4, பாலமோர் 9.4, குளச்சல் 8, இரணியல் 6, சிற்றாறு- ல் 14.2, சித்தார் 2ல் 10.6, கலியல் 8.6, பேச்சுப்பறை 15.4, பெருஞ்சாணி 8.8, புத்தன் அணை 9, முள்ளங்கினா விளை 7.2 மி. மீ. மழை பெய்திருந்தது