அரியலூர்,மே:27
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அசாவீரன்குடிக்காடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட அயன் தத்தனூர் கிராமத்திற்கு செல்லும் ரோட்டின் வலது புறம் அருவங்க வாரி என்ற இடத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்த நிலையில் ட்ரான்ஸ்பார்மரை பயன்படுத்தும் விவசாயிகள் தமிழ் பேரரசு கட்சியினுடைய திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர்
கு.முடிமன்னனிடம் நெற்பயிர்கள் கதிர் விட்டு பால் பிடிக்கும் இந்த நேரத்தில் எங்களுக்கு மின்சாரம் கிடைக்காவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எடுத்துக் கூறியதை எடுத்து உடனடியாக
அசாவீரன்குடிக்காடு மின்வாரிய இளம் மின் பொறியாளரை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச்சொல்லி டிரான்ஸ்பர் பழுது நீக்க வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்ற இளமின் பொறியாளர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டார் ஆனால் அந்த டிரான்ஸ்பார்மர் முற்றிலும் பயன்படுத்தாதமுடியாத நிலையில் இருந்தது. எனவே மாற்று டிரான்ஸ்பர் அமைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட புதிய மின்மாற்றிக்கு அறிக்கை அனுப்பி, சீனியார்ற்றி அடிப்படையில்வர ஒரு மாதம் வரை ஆகலாம் என மின்வாரிய தரப்பில் பதில் தரப்பட்டது. உடனடியாக மக்கள் காவலர் முடி மன்னன் ஐயா உடனடியாக மின் இணைப்பு கொடுக்காவிட்டால் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே தமிழ் பேரரசு கட்சி போராட்டத்தை மேற்கொள்ள கூடிய ஒரு சூழல் ஏற்படும் என்பதை விவரமாக எடுத்துக் கூறியதன் பேரில் அசாவீரன் குடிக்காடு மின் பொறியாளர் அவர்கள் மேல்மட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி போர்க்கால அடிப்படையில் கூடலூரில் இருந்து வேறு ஒரு டிரான்ஸ்பார்மரை எடுத்து வந்து 12 மணி நேரத்துக்குள்ளாக பொருத்தி இரவு7.00க்குள் விவசாயிகளுக்கு மின் இணைப்பை கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள். சாதனை படைக்க காரணமாக இருந்த மின்வாரிய ஊழியர்களுக்கும், போர்க்கால நடவடிக்கை மேற்கொண்ட இளமின் பொறியாளருக்கும் மக்கள் காவலர் முடிமன்னன் அவர்கள் சார்பாகவும் அரியலூர் மாவட்ட தமிழ்ப் பேரரசு கட்சி சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.