சென்னை, பிப்-02,
சுயமாக சம்பாதித்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதி தரச்சொல்லி அவரது மகன் அனந்த சுப்பிரமணியன் அடித்து துன்புறுத்தி 72 வயது முதியவரை வீட்டை விட்டு துரத்திவிட்டிருக்கிறார். கடந்த 2 வருடங்களாக காவல்துறை மூலமாக எந்த தீர்வும் ஏற்படாத நிலையில் சங்கர சுப்பிரமணியன்” சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் சமூக நீதிகான இயக்கத்தின் ” நிறுவனத் தலைவர் ஷாம் பிரவீன் – ஐ தனக்கு நீதி கிடைக்க நாடினார். பிறகு ஷாம்பிரவீன் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.
அச்சந்திப்பில் தெரிவித்தது:-
சென்னை சாலிகிராமம் திலகர் தெருவில் வசித்து வருபவர் 72 வயது முதியவரான சங்கர் சுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார். தற்போது அந்த வீட்டில் இவருடைய மனைவி, திருமணமாகாத மகள், 30 வயது மகன் அனந்த சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். இருவருக்கு சொந்தமான ரூ. 2 .5 கோடி மதிப்பிலான தரைதளத்துடன் கூடிய 2 மாடி வீடு உள்ளது .
இவருடை மகன் அனந்த சுப்பிரமணியன் இந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரச் சொல்லி மிகவும் மோசமாக கொடூரமான முறையில் அவரை தாக்கிய துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார்.
அதனால் சங்கர சுப்பிரமணியன் என்ற 72 வயது முதியவர் தற்பொழுது திருவல்லிக்கேணி மேன்ஷனில் தனியாக தங்கி வருகிறார் . வங்கி பணியின் வருவாயை கொண்டு சேமிப்பில் உருவாக்கிய இந்த வீட்டை அனந்த கிருஷ்ணன் தற்போது உரிமை கொண்டாடி அனுபவித்தும் வருகிறார்.
இவருக்கு ஆதரவாக
முன்னாள் அமைச்சரின் உதவியாளர் ஞானசேகரன் என்பவர் பின்னாளில் இருந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த சொத்துக்கும் சங்கர சுப்பிரமணிக்கும் சம்பந்தமே இல்லாத ஞானசேகரன்
மிரட்டி வருவதுடன், காவல்துறையும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடக்கும்போதே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவருக்கு நியாயம் கிடைக்க கிடைக்காத பட்சத்தில் துணை ஆணையர் அலுவலகம், சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய அதிகார மையங்களில் புகார் அளித்தும் இதுவரையில் சங்கர சுப்பிரமணியனுக்கு நீதி கிடைக்கவில்லை . மேலும் பணியாளர் கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பொய் புகார் அளித்தும் அவரது மன உளச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். பின்னர் கீதாவே அது பொய் புகார் என்று ஒப்புக்கொண்டார்.
ஒரு மூத்தகுடிமகனை துன்புறுத்திய வழக்கில் காவல் நிலையமே ஜாமீன் கொடுத்துள்ளது இது சட்டத்திற்கு புறம்பானது. இந்த அனந்த சுப்பிரமணியனால் திருமணமாகத மகளின் வாழ்க்கை கேள்விகுறியாக உள்ளதை நினைத்து வேதனைக் கொள்கிறார். ஆகவே சங்கரசுப்பிரமணியன் மகன் அனந்த சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சரின் உதவியாளர் ஞானசேகரன் மற்றும் சரியான வழக்கு பதியாத குறிப்பிட்ட காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க செய்தியாளர்களை நாடியிருக்கிறோம் என்றார்.