By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது
சென்னைமாவட்டம்

சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது

Last updated: February 17, 2025 4:56 pm
February 17, 2025
141 Views
Share
SHARE

சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது தருமபுரம் ஆதீனகர்த்தர் தகவல்.

 

தருமபுரம் ஆதீனம், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, மே3-லிருந்து 5-ம் தேதி வரை சென்னை காட்டாங்குளத்துரில் நடைபெறுகிறது என தருமபுரம் ஆதீனகர்த்தர் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீன மடத்தில், 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: செந்தமிழும் சிவநெறியும் வளர்க்கும் ஞான பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கோடு, தருமையாதீனம் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1984-ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்.

 

இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை ஐந்து மாநாடுகள் தருமபுரம், மலேசியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தருமையாதீன சைவசித்தாந்த மாலை நேரக்கல்லூரி தொடங்கப்பெற்று சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. தற்போது தருமையாதீனமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தரும் இணைந்து, 6-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்துடன் சென்னை, காட்டாங்குளத்தூரில் மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. “சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்தப் பதிவுகள்” எனும் பொதுத் தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

 

 

 

இம்மாநாட்டில் சைவ ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள், பாரதப் பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சைவசமய அறிஞர்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள், சமய ஆர்வலர்கள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, லண்டன், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, மொரிசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர்களும், ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.

 

இம்மாநாட்டுக்கான சிறப்பு மலர், ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை, பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் ஆகியன வெளியிடப்படவுள்ளன.

 

மாநாட்டினை முன்னிட்டு முதல் கட்டமாக சிறப்பு மலர்குழு, கருத்தரங்க குழு, நூல்வெளியீட்டு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னையில் உண்ணாவிரத போராட்டம்.
79-வது சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு
பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலை
கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்
சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகள் சீராக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்

October 11, 2024
35 Views
அடைக்கா குழியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டார மாநாடு
மாநகராட்சி குழந்தைகள் நல மையத்திற்கு LED டிவி சின்டெக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account