போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி காவல் நிலையத்திற்கு குடிபோதையில் வந்த வாலிபர், தண்ணீர் ஊற்றி புத்தாடை வாங்கிக்கொடுத்த போலீசார்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 30, இவர் குடிபோதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். அவரின் மனைவி நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணைக்காக இன்று முருகன் குடிபோதையில் தள்ளாடியபடி காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், மற்றும் போலீசார் முருகனிடம் கேட்டதற்கு, ஐந்து நாட்களாக சாப்பிடாமல் குடித்து வருவதாக கூறியதை அடுத்து, போலீசார் அவரின் மீது தண்ணீர் ஊற்றி தலைககேறிய போதையை தெளிய வைத்து முருகனுக்கு டீ மற்றும் டிபன் வாங்கிக்கொடுத்ததுடன் புத்தாடை வாங்கி கொடுத்தனர். போலீசாரின் இந்த அணுகுமுறை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அப்பகுதியில் சென்ற பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.