நாகர்கோவில் ஆக 11
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட அண்ணாசிலை அருகில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அதிக அளவில் குப்பைகள் கிடைப்பதால், வாகனங்களை நிறுத்தவும், அப்பகுதியை கடந்து செல்லவும் முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம், சுகாதாரம் மற்றும் மாசற்ற காற்று போன்றவற்றை பாதுகாக்க வேண்டிய நகராட்சி பொதுமக்களின் தேவை அறிந்து செயல்படாமல் வரி வசூல் செய்வதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதால் பொதுமக்களின் நலனில் கவனம் செலுத்தாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
எனவே உடனடியாக குளச்சல் நகராட்சி நிர்வாகம் நோய் பரவும் அபாயத்தில் இருந்து பொதுமக்களை காத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குளச்சல் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.