இளையான்குடி: மார்ச்:07
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி ஒன்றியம் பூலாங்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லை என்பது தான் தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு கிராம மக்களின் தேவைகளை எடுத்துக்கூறி புதிய பேருந்தை இயக்க அனுமதி பெற்றார்.
அதனடிப்படையில் பூலாங்குடியிலிருந்து இராஜசிங்கமங்கலம் வரையிலான நாளொன்றுக்கு இருமுறை சென்றுவரும் வகையில் பேருந்து சேவையை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர் பொதுமக்களுடன் சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சி இளையான்குடி தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் ஆறு. செல்வராசன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றியக்கழக செயலாளர் சுப.மதியரசன், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர் மலையரசி ரவிச்சந்திரன்,இளைஞரணி தனசேகரன் மற்றும் ஏராளமான திமுகவினர் மற்றும் ஊர்பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.