நாகர்கோவில் – ஜூலை – 18,
கன்னியாகுமரி மாவட்டம்
புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் ஏற்பட்ட திடீர் பேரலையால் குடியிருப்பு பகுதிகளில் கடல்நீர் புகுந்து அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனை கேள்விப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் சேதமடைந்த இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் பங்கு தந்தையின் கோரிக்கைகளையும், கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அலைப்பேசி வாயிலாக உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தினார்.
உடன் இராஜாக்கமங்கலம் ஒன்றியம் பெருந்துணைத்
தலைவர் வழக்கறிஞர் சரவணன், ஆத்திக்காட்டு விளை ஊராட்சிமன்ற தலைவர் விஜயேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.