முதுகுளத்தூர் ஏப்ரல் 12 முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஐயப்பன் மகா கும்பாபிஷேகம் விழா
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மின்வாரியம் அலுவலகம் எதிரில் முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஐயப்பன் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் தீபா ஆராதனையும் நடந்தது இதை அடுத்து காலை 8:30 மணி முதல் ஒன்பது மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் முத்து கணபதி குருக்கள் மற்றும் சிவாச்சாரியார் கள் புனித நீர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் இதை எடுத்து பக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது பின்னர் மாலை 5 மணிக்கு ஐயப்பன் வீதி உலா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை முதுவை சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ் பால குருசாமி ஏ திரு பெருமாள் ஆர் புயல்நாதன் மற்றும் அறக்கட்டளை தலைவர் பா கண்ணதாசன் எல் அருண் பிரசாத் கே மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



