ஈரோடு மே 9
தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்ட திருமாவளவன்,ரவிக்குமார் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். அதனை கொண்டாடும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
இதே போல ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
மேலும் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.