திருவாரூர்
மார்ச் 19
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.மோகனசந்திரன், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், பாரத் நிர்மன் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.230.050 இலட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் அண்ணாநகர் – காளாச்சேரி சாலை மேம்பாடு செய்தல் பணி நடைபெற்றுவருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கோவில்வெண்ணி பகுதியில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சிறுபாலத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இச்செய்தியாளர் பயணத்தில் நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலெட்சுமி, பாஸ்கர், வட்டாட்சியர் தேவகி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.