குளச்சல், பிப்- 13
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம் மகன்கள் சையது பாபு உசேன், அஷ்ரப். தற்போது இப்ராஹிம் தனது குடும்பத்துடன் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவ தினம் செய்யது பாபு உசேன், அஷரப் ஒரே பைக்கில் குளச்சல் உள்ள ஒரு ஆலயத்தில் நடந்த இன்னிசைக் கச்சேரியை காண சென்றுள்ளனர்.
அங்கு வைத்து குளச்சலை சேர்ந்த சகைபு (23) என்பவருக்கும் அஷரப்புக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்று சென்றனர். ஆனால் ஆத்திரத்தில் இருந்த சகை பு அதே பகுதியை சேர்ந்த ரியாஸ் (20 ), சமில் (30), உசேன் (38), ரிமேஷ் (34) ஆகியோருடன் கையில் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று பாபு உசேன் வீட்டுக்குள் நுழைந்து, ஐந்து பேரும் சேர்ந்து அங்கிருந்த இப்ராஹிம், செய்யது பாபு உசேன், அஷ்ரப் மீது இரும்பு கம்பியில் கொடூரமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
தாக்குதல் காயமடைந்த இப்ராஹீம், சையது பாபு உசேன் ஆகியோர் குளச்சல் அரசு மருத்துவமனையிலும், அஷ்ரப் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சம்மந்தப்பட்ட 5 பேர் மீது வழக்கு ப