சுசீந்திரம்.ஜன.27
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு காலை தேசியக்கொடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராஜேஷ் அய்யனார் முருகன் கொடியேற்றினார் கடந்த 37 ஆண்டுகளாக சிறப்பாகபணியாற்றி ஓய்வு பெரும் கிருஷ்ணன் மற்றும் தாணுமூர்த்தி ஆகியோர்களுக்கு சிறப்பாக பணியாற்றியதை பாராட்டும் விதத்தில் தலைவர் அமுதாராணி துணைத் தலைவர் மாதவன் பிள்ளை செயல் அலுவலர் ராஜேஷ் அய்யனார் முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு ஓய்வு பெறும் இருவரையும் வெகுவாக பாராட்டினர் பேரூராட்சி அலுவலகத்திற்கு குடியரசு தினத்தை கொண்டாடுவதற்க்கு வருகை புரிந்த பொதுமக்கள் ஊழியர்களுக்கு செயல் அலுவலர் இனிப்புகள் வழங்கினார்.



