மதுரை டிசம்பர் 20,
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் ஒன்று 19 ஆவது வார்டு ஆனையூர் உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள பாரதியார் தெருவில் மின் கம்பத்தில் மரம் செடி கொடிகள் படர்ந்து உள்ளது. இதற்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அவர்களிடம் அப்பகுதி மக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் மாதத்தில் ஒரு நாள் பராமரிக்கும் என்ற பெயரில் மின் இணைப்பு நிறுத்தப்படுகிறது இருந்தும் இப்பகுதியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.



