திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. அரசு கலை கல்லூரி அருகிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன் மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்விடுதியில் அறைகளின் சுகாதாரம் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், குடிநீர் வசதி குறித்தும், விடுதியிலுள்ள தொலைக்காட்சி சரியான முறையில் இயங்குகிறதா என மாணவர்களிடம் கலந்துரையாடி நன்றாக படிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்கள். மேலும், குளியலறை, கழிவறை தூய்மை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விடுதியிலுள்ள மாணவர்களின் வருகையினை முறையாக கண்காணிக்கவேண்டுமெனவும், மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டுமெனவும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இவ்ஆய்வில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உடனிருந்தார்.